ராயன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 457 days ago
தனுஷ் தனது 50வது படமாக 'ராயன்' என்கிற படத்தை இயக்கி, நடித்துள்ளார். அவருடன் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். வட சென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதையாக ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாய் நடந்து வருகின்றன. இப்படம் வருகின்ற ஜூலை 26ம் தேதி அன்று திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது படத்தின் டிரைலர் வருகின்ற ஜூலை 16ம் தேதி அன்று வெளியாகும் என புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.