உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சித்தார்த் 40 : படத்தில் இணைந்த பிரபலங்கள்

சித்தார்த் 40 : படத்தில் இணைந்த பிரபலங்கள்

8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் ஆகிய படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் தனது 40வது படத்தில் நடிக்கின்றார். இதனை மாவீரன் படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. நேற்று முதல் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதன்படி முக்கிய வேடத்தில் சரத்குமார் நடிப்பதாக நேற்று அவரின் பிறந்தநாளில் அறிவித்தனர். தொடர்ந்து மாலையில் நடிகைகள் தேவையாணி, மீதா ரகுநாத், சைத்ரா ஆர்ச்சர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !