போதைப் பொருள் வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் கைது
ADDED : 456 days ago
தமிழ், தெலுங்கில் பிரபலமாக உள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக உள்ளார். கடந்த பிப்ரவரியில் தயாரிப்பாளர், நடிகர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து படங்களிலும் ரகுல் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கானாவில் போதை பொருள் விற்பனை செய்ததாக ரகுல் ப்ரீத் சிங் சகோதரர் அமன் ப்ரீத் சிங் உள்ளிட்ட 5 பேரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 2.6 கி.கி. கோகைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் போதை பொருள் எங்கிருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தவிர அமன் ப்ரீத் சிங்கிடம் இருந்து கோகைன் போதை பொருளை வாங்க வந்த 30 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.