உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் இணையும் ஐரா பட கூட்டணி!

மீண்டும் இணையும் ஐரா பட கூட்டணி!


கடந்த 2019ம் ஆண்டில் சர்ஜூன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஐரா'. ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. தற்போது நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஐரா பட இயக்குனர் கே.எம்.சர்ஜூன் இயக்கத்தில் நயன்தாரா மீண்டும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக இப்படம் திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் கதையில் உருவாகிறது. இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !