உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / செப். 27ல் வெளியாகும் ஜெயம் ரவியின் பிரதர்

செப். 27ல் வெளியாகும் ஜெயம் ரவியின் பிரதர்

நடிகர் ஜெயம் ரவியின் 30வது படமான 'பிரதர்' எனும் படத்தை எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார். சரண்யா பொன்வண்ணன், பூமிகா சாவ்லா, பிரியங்கா மோகன், விடிவி.கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அக்கா, தம்பி சென்டிமென்ட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்து இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் இதன் பிஸ்னஸ் பணிகளை தொடங்கியுள்ளனர். இந்த படத்தை வருகின்ற செப்டம்பர் மாதம் 27ந் தேதி வெளியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !