உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்த வாரம், இரண்டே படங்கள் ரிலீஸ்

இந்த வாரம், இரண்டே படங்கள் ரிலீஸ்

'இந்தியன் 2' படம் கடந்த வாரம் வெளிவந்ததாலும், 'ராயன்' படம் அடுத்த வாரம் வெளிவருவதாலும், முன்னும் பின்னும் சிக்கித் தவிக்க வேண்டாம் என இந்த வாரம் முக்கிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

'இந்தியன் 2' படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத காரணத்தால் இன்று சில படங்களாவது வெளியாகும் என்று எதிர்பார்த்தார்கள். இருப்பினும் “மாயபுத்தகம், திமில்” ஆகிய இரண்டே இரண்டு படங்கள் மட்டும்தான் இன்று(ஜூலை 19) வெளியாகிறது.

இந்த 2024ம் வருடத்தின் ஏழாவது மாதத்தின் மத்தியில் இருக்கிறோம். இன்றைய வெளியீடுகளுடன் சேர்த்து 125 படங்கள் வெளியாகிவிட்டது. இத்தனை படங்களில் 'அரண்மனை 4, மகாராஜா' ஆகிய படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் படங்கள் எனச் சொல்கிறது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள்.

கடந்த வாரம் வெளியான 'இந்தியன் 2' படத்தின் வசூல் பற்றி ஏதாவது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அடுத்தடுத்த வாரங்களில் வெளியாக உள்ள சில முன்னணி நடிகர்களின் படங்கள் 100 கோடி வசூலை எளிதில் கடக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !