விடாமுயற்சியில் இளமையான அஜித் : வெளியான போஸ்டர்
ADDED : 452 days ago
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‛விடாமுயற்சி'. திரிஷா, ஆரவ், அர்ஜூன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. முழுக்க முழுக்க ஆக் ஷன் படமாக தயாராகிறது. தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு அடைந்துள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து இரு போஸ்டர்கள் வெளியாகின. அதில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அவர் இருந்தார். தற்போது மூன்றாவது ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் அஜித், த்ரிஷா இணைந்துள்ள படம் உள்ளது. இதில் இளமையான தோற்றத்தில் அஜித் உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின் இளமையான தோற்றத்திற்கு அஜித் திரும்பி உள்ளார்.