சிறையிலிருக்கும் தர்ஷனுக்கு நேரில் சென்று திருமண பத்திரிக்கை கொடுத்த இயக்குனர்
கன்னட பட இயக்குனர் தருண் சுதிரும், நடிகை சோனலும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள். இந்த நிலையில் ரேணுகாசாமி கொலை வழக்கில் தனது ரசிகர் ஒருவரை கொன்றதாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் தற்போது சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷனுக்கு முதல் திருமண அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தருண் சுதீர். இதற்கு முக்கிய காரணம், இயக்குனர் சுதீரும், சோனலும் காதலித்தபோது இரண்டு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அப்போது, அவர்களின் பெற்றோரை சந்தித்து பேசி சமாதானம் செய்து இவர்கள் திருமணத்திற்கு தர்ஷன் தான் சம்மதம் வாங்கி கொடுத்துள்ளார். அதன் காரணமாகவே சிறைக்கு சென்று அவருக்கு முதல் திருமண அழைப்பிதழை கொடுத்து திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். அப்போது அவரிடத்தில் திருமணம் அழைப்பிதழை பெற்றுக் கொண்ட நடிகர் தர்ஷன், வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக திருமணத்தில் கலந்து கொள்வேன் என்று சொல்லி அனுப்பி இருக்கிறாராம்.