மனைவி நல்ல காதலியாகவும், பிடித்த காதலியாகவும் இருப்பதில்லை : டி. இமான்
விஜய் நடித்த தமிழன் படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் டி. இமான். அதையடுத்து 100 படங்களுக்கு மேல் அவர் இசை அமைத்து விட்டார். இந்த நிலையில், தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், மனைவி மற்றும் குழந்தைகள் குறித்து ஒரு கருத்து கூறியிருக்கிறார். அதில், நமக்கு பிடித்தமான காதலி மனைவி ஆவார் என்பது சந்தேகம். அதே போன்று மனைவி நல்ல காதலியாகவும், நமக்கு பிடித்த காதலியாகவும் இருப்பதில்லை . அதேபோல் நமது குழந்தைகள் நம்முடைய செல்வம் என்று வளர்க்கிறோம். என்றாலும் அதுவும் ஒரு கட்டத்தில் மாறிவிடுகிறது. நல்ல பெற்றோருக்கு நல்ல குழந்தைகள் அமைவதில்லை. நல்ல குழந்தைகளுக்கு நல்ல பெற்றோர் அமைவதில்லை. இதுதான் நிலைப்பாடாக இருக்கிறது. இமான், இசைத்துறையில் ஒரு சாதாரண கலைஞராக இருந்தாலே போதும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் இசையமைப்பாளர் ஆகிவிட்டேன். இது அந்த கடவுள் கொடுத்த வாய்ப்பு என்று கூறி இருக்கிறார் .