உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜான்வி கபூர்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜான்வி கபூர்

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், ஹிந்தி படங்களை தொடர்ந்து தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் கமிட்டாகி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த வாரம் மும்பையில் நடைபெற்ற அம்பானி இல்ல திருமணத்தில் கலந்து கொண்டார் ஜான்வி கபூர். அதோடு, ஆனந்த் அம்பானியை திருமணம் செய்து கொண்டுள்ள ராதிகா மெர்சன்ட் தனது தோழி என்பதால் திருமண நிகழ்ச்சி மட்டுமின்றி பேச்சுலர் பார்ட்டியிலும் கலந்து கொண்டார் ஜான்வி கபூர்.

இந்த நிலையில் அவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து அவரது தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூர் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த இரண்டு தினங்களாகவே உடல் நலமின்றி மிகவும் சோர்வாக காணப்பட்டார் ஜான்வி கபூர். வீட்டிலேயே மருத்துவர் பரிந்துரைப்படி சிகிச்சை எடுத்து வந்தோம். ஆனால் இன்னும் சிறப்பான சிகிச்சை தேவைப்பட்டது. அதனால் தற்போது அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !