மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
415 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
415 days ago
2024ம் ஆண்டின் கடைசி ஆறு மாதங்களில் தான் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் சூழல் இருந்தது. முதல் ஆறு மாதங்கள் தமிழ் சினிமா மிகவும் 'டல்' அடித்தது.
இந்த ஜூலை மாதத்தில் கடந்த வாரம் வெளியான 'இந்தியன் 2' பெரிய வெளியீடுகளை ஆரம்பித்து வைத்தது. அடுத்த வாரம் ஜூலை 26ம் தேதி 'ராயன்' படம் வெளியாக உள்ளது.
அதற்கடுத்து ஆகஸ்ட் 2ல் “ஜமா, மழை பிடிக்காத மனிதன், நண்பன் ஒருவன் வந்த பிறகு, பேச்சி, வாஸ்கோடகாமா” ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று 'தங்கலான், அந்தகன்' ஆகிய படங்களின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவை ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகின்றன. அந்தப் படங்களோடு 'ரகு தாத்தா' படமும் வெளியாக உள்ளது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று இந்தப் படங்கள் மோத உள்ளன.
'வாழை' படம் ஆகஸ்ட் 23ம் தேதியும், 'தி கோட்' படம் செப்டம்பர் 5ம் தேதியும், 'மெய்யழகன்' படம் செப்டம்பர் 27ம் தேதியும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சுதந்திர தினத்திற்குப் பிறகு வரும் பண்டிகை நாள் ஆயுத பூஜை, விஜயதசமி. அந்த விடுமுறை நாட்களில் 'கங்குவா' படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அப்படத்திற்குப் போட்டியாக இன்னும் எந்தப் படமும் அறிவிக்கப்படவில்லை.
அது போல தீபாவளி நாளான அக்டோபர் 31ம் தேதிக்கு 'அமரன்' படம் வெளியாகும் என்று சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார்கள். அந்த நாளில் இன்னும் சில படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்ட 'வேட்டையன்' ஆயுத பூஜையில் வரப் போகிறதா, தீபாவளியில் வரப் போகிறதா என்பது இன்னும் தெரியவில்லை. அப்பட அறிவிப்பு வந்தால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட படங்களில் மாற்றம் வருமா என்பதும் போகப் போகத்தான் தெரியும்.
இப்போதைக்கு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மட்டும் மூன்று படங்கள் மோதப் போகின்றன.
415 days ago
415 days ago