உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோட் படத்தின் ஆடியோ ரிலீசுக்கு முன்பே விஜய் - திரிஷாவின் பாடல் வெளியாகிறது!

கோட் படத்தின் ஆடியோ ரிலீசுக்கு முன்பே விஜய் - திரிஷாவின் பாடல் வெளியாகிறது!


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் கோட். அவருடன் பிரசாந்த், பிரபுதேவா, திரிஷா, மீனாட்சி சவுத்ரி, லைலா, மோகன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தில் நடிகர் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிக்க வைத்துள்ளார்கள். இப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த கோட் படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் மாதம் இறுதியில் நடைபெற உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னதாக இந்த படத்தில் விஜய் - திரிஷா இணைந்து நடனமாடி உள்ள பாடலை வெளியிட்டு பரபரப்பு கூட்டவும் திட்டமிட்டுள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !