20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில்
ADDED : 407 days ago
சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛ரகு தாத்தா'. அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 15ல் படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர். இதுதொடர்பான புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
20 வயது நடிகரை இவர் காதலிப்பதாக செய்தி பரவுகிறது. இதுபற்றி அவரிடம் எழுந்த கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் அளித்த பதில், ‛‛நடிகர் விஜய் சொன்னது போல் வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மையாகிவிடும். ஆகையால் அதை புறக்கணித்து விடுவோம். நடிப்பு குறித்த விர்சனங்களை ஏற்றுக் கொள்கிறேன். ஒரு நடிகையாக அது என்னை மேம்படுத்தும் உதவும்'' என்றார்.