மேலும் செய்திகள்
2வது திருமண வதந்தியால் மனவேதனை: நடிகை மீனா
415 days ago
எப்போது திருமணம்? ஜான்வி கபூர் அளித்த பதில்
415 days ago
25 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகும் ‛குஷி'
415 days ago
ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் ஜுலை 12ம் தேதி வெளிவந்த படம் 'இந்தியன் 2'. எதிர்மறையான விமர்சனங்கள் அதிகமாகப் பரவியதால் இந்தப் படத்தின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இருந்தாலும் 150 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் கடந்திருக்கலாம் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக விலை கொடுத்து இப்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளதாம். படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் அவ்வளவு தொகையைக் கொடுத்துள்ளார்களாம். இரண்டு வாரங்களில் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துவிட்டது. சென்னையில் கூட ஒரு சிங்கிள் தியேட்டரிலும் இப்படம் ஓடவில்லை. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் ஓரிரு காட்சிகள் ஓடுகிறது. விரைவில் தியேட்டர் ஓட்டமும் முடிவுக்கு வந்துவிடும்.
எனவே, ஓடிடியில் படத்தைத் திட்டமிட்டதற்கு முன்பாகவே வெளியிட நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறதாம். பொதுவாக ஒரு படம் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் படத்தை வெளியிடுவது வழக்கம். பெரிய படமாக இருந்தால் இன்னும் சில வாரங்கள் தள்ளி வெளியிடுவார்கள். 'இந்தியன் 2'க்கு அதிக விலை கொடுத்துவிட்டதால் நான்கு வாரங்களுக்குள் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்கிறார்கள்.
415 days ago
415 days ago
415 days ago