உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அம்மாவிற்கு கார் பரிசளித்த தினேஷ்

அம்மாவிற்கு கார் பரிசளித்த தினேஷ்

சின்னத்திரை நடிகர் தினேஷ் கோபால்சாமி கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பிறகு வேறெந்த நிகழ்ச்சியிலும், சீரியலிலும் இவரை பார்க்க முடியவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சில தினங்களுக்கு முன் தன் தந்தைக்காக ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி பரிசளித்த தினேஷ் தற்போது தனது தாயாரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் புதிதாக கார் ஒன்றை வாங்கி பரிசளித்திருக்கிறார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'நீங்கள் உங்கள் வாழ்வில் பெறும் மிகச்சிறந்த பரிசு பெற்றோரின் ஆசிர்வாதம் தான்' என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !