உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் நான்கு பிரபலங்கள்

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் நான்கு பிரபலங்கள்

நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனம் தயாரிப்பில் தனது முதல் படத்தை கடந்த ஆண்டே இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. துருவ் விக்ரம், கவின் உள்ளிட்ட சில நடிகர்களை சந்தித்து கதை சொல்லி அவர் கால்சீட் கேட்டதாகவும் கூறப்பட்டது. என்றாலும் ஓராண்டாக அந்த படம் தொடங்கப்படவே இல்லை. இந்த நிலையில் தற்போது விரைவில் அவர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அது மட்டுமின்றி ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் துருவ் விக்ரம் நாயகனாகவும், அதிதி ஷங்கர் நாயகியாகவும், விஜய் சேதுபதி மகன் சூர்யா வில்லனாக நடிப்பதாக கூறப்படுவதோடு, இப்படத்திற்கு ஏ. ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் இசையமைப்பதாகவும் கூறுகிறார்கள். இது குறித்த பேச்சு வார்த்தைகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாகவும், விரைவில் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !