கோட் மூன்றாவது பாடல் சிங்கிள் நாளை வெளியாகிறது
                                ADDED :  453 days ago     
                            
                            வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் படம் கோட். அவருடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த் , பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி திரைக்கு வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், மூன்றாவது பாடல் ஆகஸ்டு மூன்றாம் தேதியான நாளை வெளியாவதாக தயாரிப்பு நிறுவனம் ஒரு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. மேலும் இந்த பாடலை எழுதியவர்கள், பின்னணி பாடியவர்கள் குறித்த தகவல் இன்று வெளியாக உள்ளது.