ஆக., 5ல் 'தேவரா' இரண்டாவது பாடல் : கவர்ச்சி லுக்கில் ஜான்வி
ADDED : 441 days ago
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் அறிமுகமாகி அங்கு தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால் அவர் பாலிவுட்டில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். இதனால் பெரிய அளவில் கவர்ச்சியாக நடிக்கவில்லை.
தென்னிந்திய சினிமாவில் 'தேவரா' என்ற தெலுங்கு படம் மூலம் கால் பதிக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகத்தில் ஜான்வி நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் சயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் வருகிற செப்டம்பர் 27ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தின் புதிய அப்டேட்டாக இரண்டாவது பாடல் வருகிற 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு போஸ்டரில் ஜான்வி கபூர், ஜூனியர் என்.டிஆருடன் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.