எனக்கு அந்த ஆசையெல்லாம் கிடையாது : டாப்ஸி
ADDED : 434 days ago
தமிழ் சினிமாவில் ‛ஆடுகளம்' படம் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை டாப்ஸி. ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அதிகமாக ஹிந்தியில் நடித்து வருகிறார். அக் ஷய் குமார் உடன் கேல் கேல் மெயின் என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் ஆக., 15ல் படம் வெளியாகிறது.
இப்படம் புரமோஷன் தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது : ‛‛நான் வேறு யாரையும் போல வாழ விரும்பவில்லை. என்னை போலவே வாழ விரும்புகிறேன். பாலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாற வேண்டும் என்றெல்லாம் ஒரு போதும் ஆசைப்பட்டது இல்லை. என் வாழ்க்கையில் நான் முதலிடத்தில் இருக்கிறேன். காரணம் இங்கு நான் உழைக்கிறேன், சம்பாதிக்கிறேன்'' என்றார்.