ஆவேசம் தெலுங்கு ரீமேக்கில் பாலகிருஷ்ணா?
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் ஆவேசம் என்கிற படம் வெளியானது. ஜித்து மாதவன் என்பவர் இயக்கிய இந்த படத்தில் ரங்கா என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பஹத் பாசில், காமெடி கலந்த அந்த தாதா கதாபாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பை வழங்கி மலையாளத்தையும் தாண்டி தென்னிந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்தார். இப்போது வரை அந்த படத்தில் இடம்பெற்ற வசனங்கள் மற்றும் பாடல்கள் அனைத்தும் ரீல்ஸ் வீடியோக்களாக லட்சக்கணக்கில் லைக்ஸ் குவித்து வருகின்றன,
இந்த நிலையில் இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கிறது என்றும், அதில் நடிகர் பாலகிருஷ்ணா நடிக்க உள்ளார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இளம் ஹீரோவுக்கான கதையில் பாலகிருஷ்ணாவா என்று பலர் ஆச்சர்யப்பட்டாலும் பாலகிருஷ்ணாவுக்கு, அவரது பாணியிலான நடிப்புக்கு இந்த ரங்கா கதாபாத்திரம் மிகச்சரியாக பொருந்தும் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.