உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரின்ஸ் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்

பிரின்ஸ் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்

தெலுங்கில் 2022ம் ஆண்டில் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த 'பிரின்ஸ்' படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி தோல்வியடைந்தது. இதற்கு பிறகு இரண்டு வருடங்கள் கடந்தும் அனுதீப் அடுத்து படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அவரின் புதிய பட அறிவிப்பு நேற்று திடீரென வெளியானது. இவர் இயக்க உள்ள படத்தில் தெலுங்கு நடிகர் விஷ்வாக் சென் ஹீரோவாக நடிக்கிறார். காதல் கலந்த காமெடி கதையில் உருவாகிறது. இதனை பீபுல் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரிக்கின்றனர் என அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !