100 சதவீதம் கியாரன்டி தரும் பார்வதி
ADDED : 392 days ago
விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள தங்கலான் படம் ஆக., 15ல் ரிலீஸாகிறது. கேஜிஎப் பின்னணியில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலை பின்னணியாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். படத்தின் பாடல்கள், டிரைலர் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பல்வேறு ஊர்களில் புரமோஷன் செய்து வருகிறார்கள். பார்வதி கூறுகையில், ‛‛படத்தில் நடிப்பதே ஆசீர்வாதம் தான். பணம் கிடைத்தாலும் அதைவிட ரசிகர்களின் ஆதரவு பெரியது. அவர்களின் அன்பு தான் எங்களை மேலும் மேலும் உழைக்க வைக்கிறது. இந்த படம் ரசிகர்களை ஏமாற்றாது. அதற்கு நான் 100 சதவீதம் கியாரன்டி தருகிறேன்'' என்றார்.