சிவகார்த்திகேயனின் 23வது படத்தில் இணைந்த பிஜு மேனன்! அறிவித்த படக்குழு!!
ADDED : 481 days ago
அமரன் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த், கீர்த்தி சனோன் ஆகியோர் நடிக்கும் நிலையில், வில்லனாக துப்பாக்கி படத்தில் நடித்த வித்யுத் ஜம்வால் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது இப்படத்தில் மலையாள நடிகர் பிஜு மேனன் இணைந்து இருக்கிறார். இந்த தகவலை இப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருக்கிறது. இவர் ஏற்கனவே தமிழில் மஜா, தம்பி, பழனி, அரசாங்கம் என பல படங்களில் நடித்திருக்கிறார்.