தெலுங்கில் ரீ ரிலீசான விஜய்சேதுபதி படம்!
ADDED : 466 days ago
நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் திரைக்கு வந்த அவரது ஐம்பதாவது படம் 'மகாராஜா'. இப்படம் 100 கோடி வசூல் சாதனை செய்தது. இதன் காரணமாக மீண்டும் விஜய் சேதுபதியின் ஹீரோ மார்கெட் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் தற்போது 2019ம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' என்ற படம் கடந்த 9ம் தேதி ஆந்திரா, தெலுங்கானாவில் 400 தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை தெலுங்கில் புதிய படங்கள் வெளியாகவில்லை என்பதால் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக கூறுகிறார்கள். அதோடு இந்த சூப்பர் டீலக்ஸ் படத்தை விரைவில் தமிழிலும் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். இப்படத்தில் விஜய்சேதுபதியுடன் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில், மிஷ்கின், காயத்ரி என பலர் நடித்துள்ளார்கள்.