உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : அக்காவுக்கு போட்டியாக வந்த கே.ஆர்.சாவித்திரி

பிளாஷ்பேக் : அக்காவுக்கு போட்டியாக வந்த கே.ஆர்.சாவித்திரி

லலிதா, பத்மினி, ராகினி வரிசையில் சினிமாவுக்கு வந்த சகோதரிகள் கே.ஆர். விஜயா, கே.ஆர்.சாவித்திரி, கே. ஆர்.வத்சலா. முதல் மூன்று சகோதரிகளில் பத்மினி மட்டுமே வெற்றி பெற்றார். இரண்டாவது வரிசை சகோதரிகளில் கே.ஆர். விஜயா மட்டுமே பெரியளவில் வெற்றி பெற்றார்.

மூவரின் தந்தை தெலுங்கர், தாய் மலையாளி. பிறந்தது திருத்தணியில். கோவில் திருவிழா மேடைகளில் ஆடிக்கொண்டிருந்த கே.ஆர் விஜயாவை கற்பகம் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் கே.எஸ் கோபாலகிருஷ்ணன் . பிற்காலத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர்தான் கே.ஆர்.சாவித்திரி. 1970ம் ஆண்டு 'ரக்த புஷ்பம்' என்ற மலையாள படத்தில் அறிமுகமானார்.

அதன் பிறகு 1985ம் ஆண்டில் யாத்ரா மற்றும் சாந்தம் பீகாரம், 1986ம் ஆண்டில் படையணி மற்றும் தேசதனக்கிளி, கரையறியில்லா போன்ற பல படங்களில் நடித்தார். மலையாள படத்தில் நடித்து வந்த சாவித்திரி 1990ம் தமிழில் அறிமுகமானார். தாலாட்டு பாடவா, சேலம் விஷ்ணு, மனைவி ஒரு மந்திரி, தங்கமான ராசா, தாலாட்டுப் பாடவா, தாலி கட்டிய ராசா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் மட்டுமே நாயகியாக நடித்த கேஆர் சாவித்திரி அதன் பின்னர் அக்கா அண்ணி உள்ளிட்ட வேடங்களில் குணச்சித்திர நடிகை ஆனார். 500 படங்களுக்கு மேல் நடித்துள்ள கே.ஆர்.விஜயா நாயகியாக மட்டுமே 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !