டெலிவரி பாய், செக்யூரிட்டி கார்டு : வெற்றி வசந்த் கடந்து வந்த பாதை
ADDED : 426 days ago
மக்களுக்கு பிடித்த சீரியல்களில் ஒன்றான சிறகடிக்க ஆசை தொடரில் முத்து என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலாகியுள்ளார் வெற்றி வசந்த். முத்துவாக இவரது நடிப்புக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பும், பாராட்டும் கிடைத்து வருகிறது. இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் வெற்றி வசந்துக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அப்போது மேடையில் பேசிய தொகுப்பாளர், நடிக்க வரும் முன் வெற்றி வசந்த் உணவு டெலிவரி பாய் வேலை, நிறைய ஷெட்டுகளில் செக்யூரிட்டி வேலை பார்த்து கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருப்பதை சுட்டிக்காட்டி உருக்கமாக பேசினார். இதனையடுத்து ரசிகர்கள் வெற்றி வசந்தின் வளர்ச்சியை வியந்து பாராட்டி வருகின்றனர்.