உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகாராணி-ஆக மாறும் நயன்தாரா

மகாராணி-ஆக மாறும் நயன்தாரா

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ஐம்பதாவது படம் மகாராஜா. சிறு பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் 100 கோடி வசூல் சாதனை செய்தது. இந்த படத்தைப் பார்த்த நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோர் நித்திலனை அழைத்து பாராட்டினார்கள். இந்த நிலையில் அடுத்தபடியாக மகாராஜா படத்தை தயாரித்த அதே பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு தனது அடுத்த படத்தை இயக்கப் போகிறார் நித்திலன். மகாராணி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கப் போகிறார். இது குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ள நிலையில் விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !