உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சர்தார் 2ம் பாகத்திலும் இணைந்த ரஜிஷா விஜயன்

சர்தார் 2ம் பாகத்திலும் இணைந்த ரஜிஷா விஜயன்

சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சர்தார் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இந்த பாகமும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன், நடிகர் கார்த்தி கூட்டணியில் இப்படம் உருவாகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார்.

சமீபத்தில் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. ஏற்கனவே இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நடிப்பதாக அறிவித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தில் சர்தார் 1ம் பாகத்தில் அப்பா கார்த்தியின் மனைவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரஜிஷா விஜயனும் சர்தார் 2ம் பாகத்திலும் இணைந்துள்ளார் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !