நீண்ட வருடங்களுக்கு பிறகு அஜித்தை சந்தித்த எஸ்.ஜே.சூர்யா
ADDED : 432 days ago
எஸ்.ஜே.சூர்யா முதல்முறை இயக்குனராக கடந்த 1999ம் ஆண்டில் நடிகர் அஜித் குமாரை வைத்து 'வாலி' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு விஜய்யை வைத்தும், தன்னை கதாநாயகனாக வைத்தும் சில படங்களை நடித்து இயக்கினார்.
கடந்த சில வருடங்களாக படம் இயக்குவதற்கு இடைவேளை விட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. ஆனாலும், தொடர்ந்து கிடைக்கின்ற மேடைகளில் தன்னை அறிமுகப்படுத்தியதற்காக அஜித்திற்கு நன்றி தெரிவித்து வந்தார் எஸ்.ஜே.சூர்யா.
இன்று எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு என் மென்டார் அஜித் குமாரை சந்தித்தேன் என மகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.