உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விரைவில் வெளியாகும் ‛கோலி சோடா ரைசிங்': அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விரைவில் வெளியாகும் ‛கோலி சோடா ரைசிங்': அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் கோலி சோடா 1, 2. இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோலி சோடா மூன்றாம் பாகத்தை விஜய் மில்டன் இயக்கி வந்தார்.

இதில் சேரன், ஷாம், அபிராமி, புகழ், அவந்திகா, அம்மு அபிராமி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து ஹாட் ஸ்டாரில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தையால் இப்படம் வெளியீட்டில் தள்ளிப் போனது. சமீபத்தில் இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்தது.

இந்த நிலையில் கோலி சோடா மூன்றாம் பாகத்திற்கு 'கோலி சோடா ரைசிங்' என தலைப்பு வைத்துள்ளனர். தற்போது விரைவில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !