மகாராஜா பட இயக்குனருக்கு புதிய கவுரவம்!
ADDED : 418 days ago
கடந்த மாதத்தில் நிதிலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஸ்யப், நட்ராஜ் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 'மகாராஜா'. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக உலகளவில் ரூ. 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்தது.
இதைத்தொடர்ந்து ஓடிடியில் வெளிவந்த பிறகும் மகாராஜா படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு அளித்தனர். உலகளவில் இன்னும் அதிக கவனத்தை ஈர்த்தது மகாராஜா திரைப்படம். இந்த நிலையில் தற்போது மெல்போர்னில் நடைபெற்ற இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் இந்திய அளவில் சிறந்த இயக்குனருக்கான விருதை மகாராஜா படத்தை இயக்கியதற்காக நிதிலனுக்கு வழங்குவதாக விருது குழு அறிவித்துள்ளனர்.