பாடலாசிரியர் விவேக்கின் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய்!
ADDED : 416 days ago
தமிழ் சினிமாவில் எனக்குள் ஒருவன் என்ற படத்தின் மூலம் பாடலாசிரியர் ஆனவர் விவேக். அதையடுத்து 36 வயதினிலே, இன்று நேற்று நாளை என பல படங்களுக்கு பாடல் எழுதியவர், அட்லி இயக்கிய மெர்சல் படத்தின் மூலம் முதன்முதலாக விஜய்க்காக பாடல் எழுதினார். அதில், ‛ஆளப்போறான் தமிழன்' என்ற பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதையடுத்து தொடர்ந்து விஜய் நடித்த சர்க்கார், பிகில், பீஸ்ட், வாரிசு படங்களுக்கும் பாடல்கள் எழுதி இருக்கிறார் விவேக்.
இந்நிலையில் விவேக்கின் மனைவிக்கு சென்னையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் கலந்து கொண்டு வாழ்த்தினார். அவர் மட்டுமின்றி இயக்குனர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா அட்லி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்கள்.