சரண்யா துராடிக்கு திருமணம் ஆகிடுச்சா? அதிர்ச்சியில் ரசிகர்கள்
ADDED : 421 days ago
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தங்கமயில் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சரண்யா துராடி. செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது சினிமா, சீரியல்களில் நடிகையாக ஜொலித்து வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை என்று தான் இன்று வரை ரசிகர்கள் நம்பி வந்தனர். ஆனால், அவர் அண்மையில் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், மனைவிகள் கணவனுக்காக செய்யும் வரலெட்சுமி விரத பூஜையை செய்து கழுத்தில் தாலியுடன் நிற்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். 2020ம் ஆண்டிலேயே தனது காதலர் ராகுலை அறிமுகம் செய்து வைத்த சரண்யா, கடந்த மாதம் ராகுலின் பிறந்தநாளன்று ஹாப்பி பர்த்டே ஹஸ்பண்ட் என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில், சரண்யா, ராகுலை திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மூலம் உறுதியாகியுள்ளது.