ரித்திகா தமிழ்ச்செல்வி கர்ப்பகால புகைப்படங்கள் வைரல்!
ADDED : 412 days ago
பாக்கியலெட்சுமி தொடரில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரித்திகா தமிழ்ச்செல்வி. இவர் கடந்த 2022ம் ஆண்டு வினு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனைதொடர்ந்து சில நாட்களிலேயே சீரியலை விட்டு விலகிய ரித்திகா, இன்று வரை சீரியல் எதிலும் நடிக்காமல் நடிப்பை விட்டு விலகியே இருக்கிறார். கடந்த மார்ச் மாதம் தான் தாயாக இருக்கும் இனிய செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட அவர், தற்போது நிறைமாத வயிற்றுடன் இருக்கும் கர்ப்பகால புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்களில் ரித்திகாவை அவரது கணவர் வினு பாசத்துடன் கவனித்து கொள்கிறார்.