மகாநதி சீரியல் நடிகருக்கு பெண் குழந்தை! ரசிகர்கள் வாழ்த்து
ADDED : 420 days ago
விஜய் டியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடரான மகாநதி தொடரில் நிவின் என்கிற கதாபாத்திரத்தில் ருத்ரன் ப்ரவீன் நடித்து வருகிறார். இவரது கதாபாத்திரம் ஆரம்பத்தில் ஹீரோவாக இருந்து இப்போது இரண்டாவது ஹீரோவாக மாறியுள்ளது. எனினும், நிவின் - காவேரி காதல் காட்சிகளுக்கு தான் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனாலேயே இப்போதும் அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் சப்போர்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், ருத்ரன் ப்ரவீனுக்கு அண்மையில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட ருத்ரன் ப்ரவீனுக்கு திருமணமாகிவிட்டதா என ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். அதேசமயம் ருத்ரனின் குழந்தைக்கும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.