இயக்குனர் அவதாரம் எடுக்கும் எஸ்.பி. சரண்!
ADDED : 753 days ago
மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மகன் எஸ்.பி.சரண் தமிழ், தெலுங்கு மொழியில் பல பாடல்களைக் பாடியுள்ளார். சென்னை 600028, ஆரண்ய காண்டம் ஆகிய படங்களைக் தயாரித்தவர்.
தற்போது இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் எஸ்.பி.சரண். 'அதிகாரம்' எனும் அரசியல் கதை களத்தை கொண்ட வெப் தொடரை இயக்குகிறார். இதில் அதுல்யா ரவி, ஜான் விஜய், அபிராமி, அரவிந்த் ஆகாஷ், வினோதினி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.