சூர்யா 44வது படத்தின் புதிய அப்டேட்!
ADDED : 424 days ago
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். இதில் பூஜா ஹெக்டே, ஜெய்ராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று முடிவடைந்தது. கடந்த சில வாரங்களாக ஊட்டியில் இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தற்போது முடிவடைந்துள்ளது. இன்னும் 2 நாட்கள் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள இடுக்கியில் நாளை துவங்கும் என்கிறார்கள்.