மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து புதிய தகவல்!
ADDED : 525 days ago
'96' பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி 'மெய்யழகன்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதனை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இதில் அரவிந்த் சாமி, ஸ்ரீ திவ்யா, ஸ்வாதி கொண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றதை தொடர்ந்து இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 27ம் தேதி அன்று வெளியாவதையொட்டி இப்போது இதன் இசை வெளியீட்டு விழாவை வருகின்ற ஆகஸ்ட் 31ம் தேதி அன்று கோவையில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.