உலக அளவில் 155 கோடி வசூலித்த தனுஷின் ராயன்!
ADDED : 497 days ago
தனுஷ் இயக்கி நடித்து ஜூலை 26ம் தேதி திரைக்கு வந்த படம் ‛ராயன்'. அவருடன் எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த ராயன் படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், கடந்த 22 நாட்களில் இந்த படம் உலக அளவில் 155 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் இப்படம் ஆகஸ்ட் 26ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது.