ரஜினியின் ‛வேட்டையன்' படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகிறது!
ADDED : 462 days ago
ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் வேட்டையன். அவருடன் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பஹத் பாசில், ராணா, ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 19ம் தேதியான நாளை காலை 10 மணிக்கு வேட்டையன் படத்தின் அப்டேட் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்திருக்கிறது. அநேகமாக இது வேட்டையன் ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பாக இருக்கலாம் என்று தெரிகிறது .