உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை: நாகார்ஜூனா வேதனை

ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை: நாகார்ஜூனா வேதனை

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான நாகார்ஜூனாவுக்குச் சொந்தமான 'என் கன்வென்ஷன் சென்டர்' என்ற பிரம்மாண்ட அரங்கம், ஹைதராபாத்தில் மாதப்பூர் பகுதியில் உள்ளது. ஏரியை ஆக்கிரமித்துக் கட்டுப்பட்டுள்ளது என இன்று காலை அக்கட்டிடத்தை ஐதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்து பாதுகாப்பு நிறுவனம் இடிக்க ஆரம்பித்தது.

தனக்குச் சொந்தமான கட்டிடம் இடிக்கப்படுவது குறித்து எக்ஸ் தளத்தில் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார் நாகார்ஜூனா. அதில், “சட்டத்திற்குப் புறம்பாக இடிக்கப்படுவதால் வேதனை அடைந்தேன். அந்த நிலம் பட்டா நிலம். ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை. இன்று காலை இடிப்பு நடத்துவதற்கு முன்பாக எந்த முன் அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற முறையில், எனக்கு எதிராக தீர்ப்பு அளித்திருந்தால் நானே இடிப்பை மேற்கொண்டிருப்பேன். வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளது. எங்களைப் பற்றி எந்த ஒரு தவறான எண்ணமும் வரக் கூடாது என்பதற்காக இதைப் பதிவு செய்கிறேன். அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் தவறான நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்திடம் தகுந்த நிவாரணம் கோருவோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதையடுத்து தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் நாகார்ஜூனா வழக்கு ஒன்றை தொடர்ந்தார். வழக்கை விசாரித்து நீதிபதி வினோத்குமார் 'என் கன்வென்ஷன் சென்டர் கட்டிட இடிப்பிற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !