இயக்குனர் தனுஷூடன் ஜி. வி. பிரகாஷ்!
ADDED : 416 days ago
தனுஷ், ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன், மாறன், வாத்தி என பல வெற்றி படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாக்கி வரும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கின்றார்.
ஏற்கனவே இந்த படத்தில் பாடல்கள் நன்றாக வந்துள்ளதாக பல இடங்களில் பகிர்ந்துள்ளார் ஜி.வி. பிரகாஷ். இப்போது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் தனுஷூடன் எடுத்த செல்பி போட்டோவை பதிவிட்டுள்ளார்.