வட இந்தியாவில் ஆக். 30ம் தேதி வெளியாகும் தங்கலான்!
ADDED : 415 days ago
விக்ரம் நடித்து பா.ரஞ்சித் இயக்கி சமீபத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவந்த திரைப்படம் 'தங்கலான்'. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்திற்கு விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் சுமாரான வசூலை பெற்றது. தமிழகம் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, வெளிநாடுகளில் ரசிகர்களை பெரிதளவில் கவரவில்லை.
இந்த நிலையில் தங்கலான் படத்தின் ஹிந்தி பதிப்பு வட இந்தியாவில் வருகின்ற ஆகஸ்ட் 30ம் தேதி அன்று வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.