ஆக., 30ல் வெளியாகும் ‛கோல்டன் ஸ்பரோ' பாடல்
ADDED : 417 days ago
ராயன் படத்திற்கு பிறகு 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை தனுஷ் இயக்கி வருகிறார். கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகிறார். அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை வுன்டர்பார் பிலிம்ஸ், ஆர். கே. புரொடக்சன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக இந்த படத்திலிருந்து முதல் பாடல் ' கோல்டன் ஸ்பரோ' விரைவில் வெளியாகிறது என அறிவித்து வந்தனர். அதோடு இந்த பாடலுக்கு நடிகை பிரியங்கா மோகன் நடனம் ஆடி இருப்பதாகவும் குறிப்பிட்டு வந்தனர். இப்போது இப்பாடல் வருகின்ற ஆகஸ்ட் 30ம் தேதி அன்று வெளியாகிறது என தனுஷ் போஸ்டருடன் பதிவிட்டுள்ளார்.