ஆகஸ்ட் 30ல் புதிய அறிவிப்பு : பிரியா அட்லி வெளியிட்ட தகவல்
ஹிந்தியில் ஷாரூக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கிய அட்லி அதையடுத்து தமிழில் விஜய் நடிப்பில் தான் இயக்கிய தெறி படத்தை ஹிந்தியில் தயாரித்துள்ளார். காளீஸ் என்பவர் இயக்கும் இந்த படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பேபி ஜான் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இயக்குனர் அட்லியின் மனைவியான பிரியா அட்லிதான், அட்லியின் ஏ பார் ஆப்பில் புரொடக்சன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிர்வாகம் செய்து வருகிறார். இதற்கு முன்பு சங்கிலி புங்கிலி கதவை தொற, அந்தகாரம் படங்களை தயாரித்துள்ள பிரியா அட்லி, தற்போது பேபி ஜான் படத்தை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ஆகஸ்ட் 30ம் தேதி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு பிரியா அட்லி தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பா? இல்லை வேறு ஏதேனும் புதிய நிறுவனங்களை அவர் தொடங்குவது குறித்த அறிவிப்பா என்பது தெரியவில்லை.