அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் செருப்பால் அடியுங்கள் : விஷால்
நடிகர் விஷால் தனது 47வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் முதியோர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் விஷால் கூறியதாவது: 80 சதவீத பெண்கள் நடிக்க வாய்ப்புத்தேடி வந்து ஏமாற்றப்படுகிறார்கள். அவர்கள் வாய்ப்புத்தேடி செல்லும் நிறுவனங்கள் பற்றி ஆராய்ந்து செல்ல வேண்டும்; பெண்கள் சுதாரிப்புடன் இருக்க வேண்டும். கேரளாவின் ஹேமா கமிட்டி போலவே தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் 10 பேர் கொண்ட ஒரு கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்; விரைவில் அறிவிப்பு வெளியாகும். இது எங்களின் கடமை.
தன் மீது புகார் கூறிய ஸ்ரீரெட்டி யார் என்றே எனக்கே தெரியாது. ஆனால் அவர் செய்த சேட்டைகள் எல்லாம் எனக்கு தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.