ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று வந்த விஜய்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்திற்காக விஜய் கலந்து கொள்ளும் விதமாக இசை வெளியீட்டு விழா எதுவும் நடைபெறாத நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் தீவிரமாக புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் விஜய்யும் இந்த படத்தின் ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்க்கிறார். அதே சமயம் இன்னொரு பக்கம் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டை வரும் செப்டம்பர் 23ம் தேதி விக்கிரவாண்டியில் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் ஷீரடி சென்று சாய்பாபாவை தரிசனம் செய்து வந்துள்ளார். அவருடன் புஸ்சி ஆனந்தும் சென்று வந்துள்ளார். கோட் பட வெற்றி மற்றும் தனது புதிய அரசியல் பயண முதல் மாநாடு வெற்றிக்காக பிரார்த்தனை செய்துள்ளார்.