உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அர்ஜுன் தாஸின் புதிய படத்தின் பெயர் 'பாம்': மோஷன் போஸ்டர் வெளியானது

அர்ஜுன் தாஸின் புதிய படத்தின் பெயர் 'பாம்': மோஷன் போஸ்டர் வெளியானது

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் அன்பு என்ற வேடத்தில் நடித்து பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். அதன் பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர், விக்ரம் என பல படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ் நடிப்பில் கடைசியாக ரசவாதி என்ற படம் திரைக்கு வந்தது. இந்த நிலையில் தற்போது அவர், விஷால் வெங்கட் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக சிவாத்மிகா ராஜசேகர் நடிக்கும் இப்படத்தில் காளி வெங்கட், நாசர், பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, டி. இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்திற்கு பாம் என்று டைட்டில் வைத்துள்ளார்கள். அது குறித்து ஒரு மோஷன் போஸ்டரை படக் குழு வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !