சந்தோஷ் பிரதாப், ஷ்ரத்தா ஸ்ரீநாத் இணைந்து ஆடும் கேம்
ADDED : 415 days ago
தூங்காவனம், கடராம் கொண்டான் போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா சமீபகாலமாக புதிதாக வெப் தொடர் ஒன்றை இயக்கவுள்ளார் என தகவல் வெளியானது. தற்போது இது குறித்து கிடைத்த கூடுதல் தகவலின் படி, ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் இந்த வெப் தொடரை போர் தொழில் படத்தை தயாரித்த அப்பளாஷ் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
மேலும், இதில் முதன்மை கதாபாத்திரங்களில் சந்தோஷ் பிரதாப், ஷ்ரத்தா ஸ்ரீநாத் என இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இதற்கு 'கேம்' என தலைப்பு வைத்துள்ளனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.