உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹேமா கமிஷன் பற்றி என்னிடம் கேட்காதீங்க : ஆண்ட்ரியா

ஹேமா கமிஷன் பற்றி என்னிடம் கேட்காதீங்க : ஆண்ட்ரியா

நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா சென்னையில் கடை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் ஒரு பெண்ணாக மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

ஆண்ட்ரியாவிடம் மலையாள சினிமாவில் நிலவும் பாலியல் குற்றச்சாட்டு, நீதிபதி ஹேமா கமிஷன் அளித்த அறிக்கை பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அதைப்பற்றி என்னிடம் கேட்க வேண்டாம், நோ கமெண்ட்ஸ் என தெரிவித்தார்.

எப்போதும் தைரியமாக கருத்துக்களை வெளியிடும் ஆண்ட்ரியா இப்படிக் கூறியது ஏமாற்றமாக இருந்தது .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !